தரமான சேவையளிக்கும் ஓசூர் காவேரி மருத்துவமனை
தரமான சேவையளிக்கும் ஓசூர் காவேரி மருத்துவமனைஓசூர்:-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இயங்கி வரும் காவேரி மருத்துவமனை, 125க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, 50க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் முதலுதவி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 24 மணி நேர அறுவை சிகிச்சை, எண்டோஸ்கோபி, 8 வென்டிலேட்டர்கள் கொண்ட, 15 படுக்கைகளுடன் ஐ.சி.யு., மற்றும் 8 இயந்திரங்களை கொண்ட டயாலிசிஸ் பிரிவு, தானியங்கி ஆய்வகம், பிசியோதெரபி, குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், பித்தநீர் மற்றும் கணைய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.மேலும், ரத்த வங்கி உள்ள முதல் தனியார் மருத்துவமனையாக, காவேரி மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவ சேவையின் அனைத்து அம்சங்களிலும், தரத்தை உறுதி செய்வதற்காக, காவேரி மருத்துவமனைக்கு, என்.ஏ.பி.எச்., அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கே சென்று, முழு உடல் பரிசோதனை செய்யும் வகையில், 'வெல்ன்ஸ் ஆன் வீல்ஸ்' என்ற பஸ் போன்ற அமைப்பை காவேரி மருத்துவமனை உருவாக்கியுள்ளது. சிறந்த டாக்டர்கள் குழுவினர், 24 மணி நேரமும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கின்றனர்.மயக்கவியல், இதயவியல், கேத் லேப், நிரிழிவு நோய், பல், தொண்டை, இரைப்பை குடல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறியல், எலும்பியல், சிறுநீரகவியல், கண், பொது மருத்துவம் போன்ற அனைத்து விதமான சிகிச்சைகளும், திறமையான டாக்டர்கள் குழுவினர் மூலம் மேற்கொள்ளப்படுவதாக, காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் விஜயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.