அதிகரிக்கும் நீரிழிவு நோய் தாக்கம்கட்டுப்படுத்த டாக்டர்கள் வலியுறுத்தல்
அதிகரிக்கும் நீரிழிவு நோய் தாக்கம்கட்டுப்படுத்த டாக்டர்கள் வலியுறுத்தல்கிருஷ்ணகிரி:தமிழகத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை விட நீரிழிவு நோய் தாக்கம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் குறித்த கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் பூவதி தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், துணை முதல்வர் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் செல்வராஜ், மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு, மாநில நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சி திட்ட மாநில இணைச் செயலாளர் பவதாரனி, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நீரிழிவு நோய் பிரிவு துறைத்தலைவர் பிரகாஷ் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி பொது மருத்துவப்பிரிவு பேராசிரியர் செந்தில் மற்றும் மருத்துவர்கள் நீரிழிவு நோய் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரத்தக்கொதிப்பு, 19 சதவீதம், சர்க்கரை நோய், 10 சதவீதம் உள்ளது. தமிழக அளவில் ஒப்பிடும்போது, மாவட்டத்தில் ரத்தக்கொதிப்பு சதவீதம் குறைவாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு அதிகளவிலும் உள்ளது. சர்க்கரை நோயின் தாக்கம், பாதிப்பு, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கையில், உணவு முறையில் மாற்றம், தினசரி, 30 நிமிட நடைப்பயிற்சி, மருத்துவர்களால் வழங்கப்படும் மருந்து மற்றும் மருத்துவ பரிந்துரைகளை தவறாது கடைப்பிடித்தல், 3 மாதத்திற்கு ஒரு முறை சர்க்கரை நோய் அளவை கண்டறிந்து, தொடர் சிகிச்சை மேற்கொள்ளுதல் குறித்து விவாதிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.