| ADDED : மே 09, 2024 06:11 AM
கிருஷ்ணகிரி : தமிழ்நாடு முழுவதும், 116 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முதன்மை சார்பு நீதிபதி சசிகலா சென்னை சிறு வழக்குகள் விசாரணை நீதிமன்றத்திற்கும், ஊத்தங்கரை சார்பு நீதிபதி செந்தில் குமார் ராஜவேல், சென்னை தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாடமி துணை இயக்குனராகவும், கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நடுவர் பிரியா, மேட்டூர் சார்பு நீதிபதியாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் ஜெனிபர், கிருஷ்ணகிரி கூடுதல் சார்பு நீதிபதியாகவும், கிருஷ்ணகிரி சிறப்பு சார்பு நீதிபதி அஸ்வக் அகமது, ஊத்தங்கரை சார்பு நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல பத்மநாபபுரம் சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், கிருஷ்ணகிரி குற்றவியல் நீதித்துறை நடுவராகவும், கோபிசெட்டிபாளையம் சார்பு நீதிபதி ஸ்ரீவித்யா, ஓசூர் கூடுதல் சார்பு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவு, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.