மேலும் செய்திகள்
போதை பொருள் தடுப்பு பள்ளியில் விழிப்புணர்வு
17-Feb-2026
ஓசூரில் காங்., ஆர்ப்பாட்டம்
17-Feb-2026
எருது விடும் விழா 18 பேர் மீது வழக்கு
17-Feb-2026
அங்கன்வாடி ஊழியர்கள் 14வது நாளாக போராட்டம்
17-Feb-2026
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 38வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 15ல் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேகம், பிரகார உற்சவமும், 10:00 மணிக்கு, லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாணமும், மாங்கல்யதாரணமும் நடந்தன. திருக்கல்யாணம் முடிந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் நரசிம்மர் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இரவு, கருட வாகனத்தில் நகர்வலமும், இன்று (மே 21) காலை, நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரகார உற்சவமும், இரவு, யானை வாகனத்தில் நகர் வலமும் நடக்க உள்ளன. தொடர்ந்து, குதிரை வாகனம், சந்திரபிரபா வாகனம், புஷ்ப பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடக்க உள்ளன.
17-Feb-2026
17-Feb-2026
17-Feb-2026
17-Feb-2026