உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பஸ் கண்ணாடி உடைப்புமர்ம நபர்களுக்கு வலை

அரசு பஸ் கண்ணாடி உடைப்புமர்ம நபர்களுக்கு வலை

அரசு பஸ் கண்ணாடி உடைப்புமர்ம நபர்களுக்கு வலைஓசூர்: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி அருகே இருளப்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 49. அரசு பஸ் டிரைவர்; இவர் நேற்று முன்தினம், சேலத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு பஸ்சை ஓட்டி சென்றார். ஓசூரிலுள்ள ராயக்கோட்டை சாலையில், முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இரவு, 8:00 மணிக்கு பஸ்சை ஓட்டி வந்தபோது, அடையாளம் தெரியாத இருவர், பஸ்சிற்கு வழிவிடாமல் பைக்கில் சென்றனர். டிரைவர் சரவணன் தொடர்ந்து ஹார்ன் அடித்தும் வழிவிடவில்லை. ஒரு கட்டத்தில் பைக்கை நிறுத்தி விட்டு, ஹார்ன் அடித்ததால், டிரைவரிடம் வந்து வாக்குவாதம் செய்த இருவரும், பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி விட்டு, அங்கிருந்து பைக்கில் தப்பினர். டிரைவர் சரணவன் புகார் படி, மர்ம நபர்களை, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை