பெண்ணின் புதிய கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டியவருக்கு காப்பு
பெண்ணின் புதிய கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டியவருக்கு 'காப்பு'அஞ்செட்டி:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த சேசுராஜபுரம் அருகே அட்டப்பள்ளத்தை சேர்ந்தவர் லிங்கண்ணன், 50. விவசாயி; இவர், பூமரத்துக்குழி பகுதியை சேர்ந்த, 32, வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்தார்.இந்நிலையில், பூமரத்துக்குழியை சேர்ந்த விவசாயி பெரியசாமி, 42, என்பவருடன் அப்பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கடந்த, 6 மாதங்களுக்கு முன், லிங்கண்ணன் தொடர்பை அப்பெண் துண்டித்தார். இது அவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.நேற்று முன்தினம் மாலை காட்டுப்பகுதியில், அப்பெண்ணுடன் பெரியசாமி தனிமையில் இருப்பதை கண்ட லிங்கண்ணன், ஆத்திரத்தில் அரிவாளால் பெரியசாமியின் கழுத்து மற்றும் இடது பக்க கன்னத்தில் வெட்டினார்.இதில் படுகாயமடைந்த அவர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அஞ்செட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, லிங்கண்ணனை கைது செய்தனர்.