உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி சி.இ.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மகாதேவப்ப நாயுடு தலைமை வகித்தார். முன்னாள் மாநில சட்ட செயலாளர் பெருமாள்சாமி, மாநில துணைத் தலைவர் ஈஸ்வர பாபு, மாநில சட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை உடனே அறிவிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்களை முதன்முதலில் நியமனம் செய்யும்போதுதான் தேவையே தவிர, ஆசிரியராக நியமித்து 15, 20 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறுவது, ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி.இலவச கட்டாய கல்வி சட்டம் லோக்சபாவில், 2009ல் நிறைவேற்றி, 2011 ஜூலை 29 முதல் அமலுக்கு வந்தது. ஆகவே இச்சட்டம் அமலுக்கு வந்த நாளுக்கு பின்னர் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்களுக்குத்தான், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி பொருந்தும். அதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை