மேலும் செய்திகள்
குடிபோதையில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்
08-Jan-2025
தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்றவருக்கு ஆயுள் கிருஷ்ணகிரி,:ஓசூர் அடுத்த சானசந்திரம், காந்திநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, கூலித்தொழிலாளி. கடந்த, 2018 செப்., 6 இரவு, சானசந்திரம், வி.ஓ.சி., நகரிலுள்ள பெட்டிக்கடை அருகே நின்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜய், 29 என்பவர் அங்கு குடிபோதையில் வந்துள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், விஜய் கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். ஓசூர் டவுன் போலீசார் விஜய்யை கைது செய்தனர். இவ்வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த, 6 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், விஜய்க்கு ஆயுள் தண்டனை மற்றும், 1,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்தாவிட்டால், மேலும், 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.
08-Jan-2025