உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குதிருக்கல்யாண வைபவம்

அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குதிருக்கல்யாண வைபவம்

அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குதிருக்கல்யாண வைபவம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த மாதம், 25ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 26ல் மகா சிவராத்திரியும், 27ல், மயான கொள்ளை நிகழ்ச்சியும், 28ல், அம்மனுக்கு தாலாட்டும், நேற்று முன்தினம் தீமிதி விழாவும் நடந்தது. நேற்று பகல், 12:00 மணிக்கு, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், சிவனுக்கும் சிறப்பு யாகம் வளர்த்து, மந்திரங்கள் முழங்க, அம்மையப்பனுக்கு பட்டாடை உடுத்தி, மாலை மாற்றி திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசைகளுடன் கலந்து கொண்டு, அம்மனுக்கு மொய் எழுதினர். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு, புடவை மற்றும் மங்கல பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மாலை, 5:00 மணிக்கு, அம்மையப்பன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இன்றிரவு, 7:00 மணிக்கு, கும்ப பூஜை, அன்னதானம், கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை