பயனாளிகளுக்கு 1,200 கறவை பசுக்கள் மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்
கிருஷ்ணகிரி: வேளாண் துறை சார்பில், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் பயனாளிகளுக்கு, 1,200 கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்-சைப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேளாண் துறை சார்பில், ஒருங்கி-ணைந்த பண்ணைய திட்டத்தில், கடந்த, 2021 - 22ம் நிதி-யாண்டில், 50,000 ரூபாய் மானியத்தில், 200 கறவை பசுக்களும், 2022-23ம் நிதியாண்டில், 25,000 ரூபாய் மானியத்தில், 500 கறவை பசுக்களும், 2023 - 24ம் நிதியாண்டில், 30,000 ரூபாய் மானி-யத்தில், 500 கறவை பசுக்கள் என மொத்தம், 1,200 பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு, 2024 - 25ம் நிதியாண்டில், 500 பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. மேலும் ஒருங்கி-ணைந்த பண்ணைய திட்டத்தில், கறவை பசு வளர்ப்போருக்கு தீவன புல், மண்புழு உரம் தயாரிக்க தொட்டிகள், தார்பாலின், தேன்பெட்டி, தோட்டக்கலை செடி வகைகள், சிறுதானிய நுண்-ணுாட்ட உரம், ராகி விதைகள் வழங்கப்படுகிறது. நெற் பயிரில் ரசாயன மருந்துகளை குறைக்க அனைத்து நடவடிக்-கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மரபுசார் நெல் ரகங்-களை ஊக்குவிக்கும் பொருட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காரீப் மற்றும் ரபி பருவங்களில், 25,300 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. துவரை, 10,200 ஹெக்டேர் பயிரிடப்படுகிறது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.