உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு திருட முயற்சி

டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு திருட முயற்சி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மதகொண்டப்பள்ளியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு வெங்கடேசன், 50, என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். கடந்த, 4 இரவு, 9:45 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை, 10:50 மணிக்கு கடையை திறக்க வந்த போது, கடையின் பின்புற சுவற்றில் துளை போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், கடைக்குள் சென்று பார்த்த போது, மதுபானங்கள் மற்றும் பணம் திருட்டு போக-வில்லை என தெரியவந்தது.இது தொடர்பாக, அவர் கொடுத்த புகார்படி தளி போலீசார் வழக்-குப்பதிந்து, டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி