உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுப்பதோடு விளையாட்டுகளில் சாதிக்க வைக்க வேண்டும்

குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுப்பதோடு விளையாட்டுகளில் சாதிக்க வைக்க வேண்டும்

ஓசூர்: ''குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுப்பதோடு, அவர்களை விளையாட்டு போட்டிகளில் சாதிக்க வைக்க வேண்டும்,'' என, ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி., தேவாரம் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள புனித ஜான்போஸ்கோ அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், விளை-யாட்டு விழா நேற்று நடந்தது. தர்மபுரி மறை மாவட்ட முதன்மை குரு அருள்ராஜ், ஓசூர் துாய இருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தை ஜார்ஜ், பள்ளி தாளாளர் ஏஞ்சலா, தலைமையாசி-ரியர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி., தேவாரம் தலைமை வகித்து, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, விளையாட்டு போட்டிகளை, ஒலிம்பிக் ஜோதி ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து நடத்தப்-பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்றவர்-களுக்கு அவர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். தேசிய கோ-கோ, வாள் சண்டை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியரை பாராட்டியதுடன், மாநில பூப்பந்து, கையுந்து பந்து வீராங்கனைக-ளுக்கு கேடயம், தங்கப்பதக்கம் ஆகியவற்றை வழங்கினார்.தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நமக்கு முக்கிய-மானது, பள்ளி மற்றும் கல்லுாரி பருவங்கள் தான். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த குழந்தைகள் எவ்வளவு சிறப்பாக இங்கு விளையாடுகின்றனர். இன்னும் இதை விட சிறப்பாக விளையாட வாய்ப்புகள் உள்ளன. தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகளுக்கு, நல்ல கல்வியை கொடுப்பதோடு, மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச போட்டி, காமன் வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். ஏ.டி.எஸ்.பி., சங்கு, டி.எஸ்.பி., பாபு பிரசாந்த், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், டி.வி.எஸ்., தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, கவுன்சிலர்கள் பாக்கியலட்சுமி, இந்திராணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை