| ADDED : ஆக 01, 2024 01:45 AM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த தேவீரஹள்ளி நடுபழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சாலை அமைக்க, சாதிநாயக்கன்பட்டி குட்டையில் இருந்து நொரம்பு மண் எடுக்க அனுமதி கேட்டு, அப்பகுதி மக்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில் அவர்கள் கூறியுள்ளதாவது: தேவீரஹள்ளி நடுபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவி-லுக்கு சாலை, அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து அதி-காரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் ஊர்மக்கள் நிதி பங்களிப்புடன், கோவில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. கோவில் கருவறை மற்றும் மண்டபம் அமைத்தல், தேர் செல்லும் சாலை அமைத்தல், பிரதான சாலையி-லிருந்து குன்றின் மேலுள்ள கோயிலுக்கு வாகனங்கள் செல்ல சாலை அமைத்தல், கோயில் பிரகாரத்தை சுற்றி தளம் அமைத்தல் போன்ற பணிகள் தொடக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. இப்பணி-களுக்கு தேவையான மண்ணை தாமோதரஅள்ளி பஞ்., சாதிநா-யக்கன்பட்டி குட்டையிலிருந்து எடுத்து பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.