உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காவேரிப்பட்டணத்தில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

காவேரிப்பட்டணத்தில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

காவேரிப்பட்டணத்தில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்கிருஷ்ணகிரி:ஹிந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயல்வதாகவும், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்விக்கான நிதியை தமிழகத்திற்கு தர மறுப்பதாகவும் கூறி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம் சார்பில், காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி தலைமை வகித்தார். மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில், மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டன. காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார், துணை தலைவர் மாலினி மாதையன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி