உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அறிவியல் தின கண்காட்சி

அறிவியல் தின கண்காட்சி

அறிவியல் தின கண்காட்சிதர்மபுரி:பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு பள்ளியில், அறிவியல் தின கண்காட்சி நேற்று நடந்தது.தர்மபுரி அடுத்த, இலக்கியம்பட்டியில் பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி நிர்வாகம், மற்றும் விஷன் எம்பவர் அறக்கட்டளை இணைந்து, அறிவியல் தின கண்காட்சி நேற்று நடத்தினர். இதில், பங்கேற்ற அப்பள்ளி மாணவர்கள் அடுப்பில்லா ஆரோக்கியமான சமையல், நீரில் மூழ்கும் மற்றும் மிதக்கும் பொருட்கள், சரிவிகித உணவு, மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் குறித்த தங்கள் படைப்புகளை காட்சிப் படுத்தினர். அதே வளாகத்தில் இயங்கும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு பள்ளி மாணவ, மாணவியர் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். தொடர்ந்து, கண்காட்சி மற்றும் வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம் வழங்கி பராட்டினர்.இதில், தலைமை ஆசிரியர் மீனா, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பரிதா பானு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி