உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போக்குவரத்திற்கு இடையூறுபுளியமர கிளைகள் அகற்றம்

போக்குவரத்திற்கு இடையூறுபுளியமர கிளைகள் அகற்றம்

போக்குவரத்திற்கு இடையூறுபுளியமர கிளைகள் அகற்றம்பர்கூர்:பர்கூரில் இருந்து திருப்பத்துாருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், சாலையின் இருபுறமும் நுாற்றுக்கணக்கான பழமையான புளியமரங்கள் உள்ளன. இதன் கிளைகள் விரிந்து சாலை நடுவே தாழ்வாக இருந்தது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது உரசி, போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்தது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாருக்கு சென்ற புகார் படி, சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக, தாழ்வாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று, நெடுஞ்சாலைத்துறையினர் பர்கூர், திருப்பத்துார் சாலையில், தாழ்வான புளியமரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை