மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம் பனமரத்துப்பட்டி:
04-Feb-2025
பனமரத்துப்பட்டி: ஆர்ப்பாட்டம் செய்ய போலீசார் அனுமதி அளிக்காததால், விவ-சாய நிலத்தை திருப்பி கேட்டு, 296 விவசாயிகள் கோரிக்கை மனு அளித்து சென்றனர்.அகில இந்திய விவசாயிகள் மகா சபையின், ஒன்றிய குழு உறுப்-பினர் ஜீவா தலைமையில் ஏராளமானோர், பனமரத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு நேற்று காலை, 10:00 மணிக்கு வந்தனர். அத்திப்பட்டி, சூரியூர் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்-பட்ட, 1,400 ஏக்கர் விவசாய நிலத்தை, விவசாயிகளுக்கே திரும்பி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்வ-தாக தெரிவித்தனர்.ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என, மல்லுார் மற்றும் பனமரத்துப்பட்டி போலீசார் தெரிவித்தனர். விவசாயிகள் மகா சபை மாநில பொதுச் செயலர் சந்திரமோகன், மாவட்ட தலைவர் அன்பு உள்ளிட்டோர், போலீசாருடன் பேச்சு வார்த்தை நடத்-தினர்.தனித்தனியாக சென்று, மனு அளிக்க போலீசார் அனுமதி அளித்-தனர். பனமரத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் ராஜவேலிடம், 296 பேர் தனித்தனியாக சென்று, விவசாய நிலம் கேட்டு மனு அளித்-தனர். மாவட்ட செயலர் அய்யந்துரை, பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
04-Feb-2025