உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கால்நடை பண்ணையில் 42 ஆடுகள் திருட்டு

கால்நடை பண்ணையில் 42 ஆடுகள் திருட்டு

ஓசூர், ஓசூர் மத்திகிரி அருகே, 1,641 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பண்ணை உள்ளது. இங்கு, மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட பல்வேறு வகையான கால்நடைகள் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், பண்ணையை சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லாததால், மர்ம நபர்கள் அடிக்கடி பண்ணைக்குள் புகுந்து, மது அருந்துவது உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களை செய்து வருகின்றனர்.கடந்த, 2 மதியம், 10:00 மணிக்கு, பண்ணையிலுள்ள கொட்டகைக்குள் புகுந்த மர்ம கும்பல், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 42 ஆடுகளை திருடி சென்றது. கால்நடை பண்ணை துணை இயக்குனர் டாக்டர் சக்திவேல்பாண்டி, மத்திகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ