உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீடு புகுந்து 6 பவுன் நகை ரூ.1 லட்சம் திருட்டு

வீடு புகுந்து 6 பவுன் நகை ரூ.1 லட்சம் திருட்டு

வீடு புகுந்து 6 பவுன் நகை ரூ.1 லட்சம் திருட்டுஓசூர்,:கெலமங்கலம் அருகே பை ரமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி பத்மா, 26. கடந்த மாதம், 23 காலை, 11:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றார். ஒரு மணி நேரம் கழித்து வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டிலிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, 3.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 6 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. பத்மா புகார் படி, கெலமங்கலம் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ