| ADDED : ஜூலை 07, 2024 05:56 AM
ஓசூர் : சென்னை, பெரம்பூரில் வீட்டின் அருகே நின்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். சி.பி.ஐ., வசம் வழக்கை ஒப்படைக்க வேண்டும். முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி செயலர் செந்தமிழ் தலை-மையில், ஓசூர் மாநகர மாவட்ட செயலர் ராமச்சந்திரன், சமூக ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் இளையராஜா, தொண்ட-ரணி மாவட்ட அமைப்பாளர் வினோத்குமார், மாநகர அமைப்-பாளர் சூரியவளவன், முன்னாள் நகர செயலர் கிருஷ்ணன் உட்-பட பலர், பழைய பெங்களூரு சாலையில் மறியலில் ஈடுபட்-டனர். இதனால் அவ்வழியாக, 15 நிமிடங்களுக்கு மேல் போக்கு-வரத்து பாதிக்கப்பட்டது.டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு மறியலை கைவிட்டனர். அதன் பின், ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, கொலையான ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்-தினர்.