உள்ளூர் செய்திகள்

சித்தர் குரு பூஜை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் வளாகத்தில், தவத்திரு நவகண்ட யோகி மகான் ஸ்ரீசற்குரு சபரிமுத்து சித்தருக்கு நேற்று குரு பூஜை நடந்தது.இதில், நேற்று காலை, 9:30 மணிக்கு, சிவானந்த கருணாசாமி தலைமையில், மஹா கணபதி ஹோமம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, சபரிமுத்து சித்தரின் சிலைக்கு அபிேஷகம், திருமுறை, தேவார, திருவாசக விண்ணப்பமும், பகல், 12:00 மணிக்கு, மஹா தீபஆரத்தி, மகேஷ்வர பூஜையும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, 200க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சாதுக்கள், சிவனடியார்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை