உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்

மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்

மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்ஓசூர், செப். 17-கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சீத்தாராம் மேடு அரசு உருது மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் தேவசேனா தலைமை வகித்தார். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், 72 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினர். தொடர்ந்து, ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்த முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டியை, எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா துவக்கி வைத்தனர். மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, கவுன்சிலர்கள் சீனிவாசலு, மோசின்தாஜ் நிசார், உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !