உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நில அபகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நில அபகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

அரூர் : தமிழக மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், நில அபரிப்பை எதிர்த்து, நேற்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்-தது. அரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகம் முன் நடந்த ஆர்ப்-பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அன்புரோஸ் தலைமை வகித்தார். இதில், மாநில தலைவர் டில்லிபாபு, சி.பி.எம்., மாவட்ட செயலாளர் குமார், மாநில துணைச் செயலாளர் கண்-ணகி, ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்டோர் பேசினர்.இதில், அரூர் தாலுகா சிட்லிங் பஞ்., பகுதியை சேர்ந்த மலை-யாளி இன பழங்குடி மக்களுக்கு அரசு வழங்கிய கண்டிசன் பட்டா நிலங்களை, சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மோசடியாக ஏமாற்றி, நிலப்பதிவு செய்துள்ளதை ரத்து செய்து, நிலத்திற்கு உரிமையான பழங்குடி மக்களிடம் வழங்க வேண்டும். சித்தேரியில் பல ஆண்டுகளாக சாகுபாடி செய்து வரும் மலை-யாளி இன பழங்குடி மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா மற்றும் வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு ஜாதிச்சான்றிதழ் விரைந்து வழங்க வேண்டும். சித்தேரியில் அனைத்து மலை கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து தர வேண்டும். 2006ம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கால்நடைகள் மேய்க்க அனுமதி வழங்க வேண்டும். அவர்களை வெளியேற்றுவதை கை விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின், அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை