உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ.,வினருக்கு உறுப்பினர் அட்டை

பா.ஜ.,வினருக்கு உறுப்பினர் அட்டை

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகி-றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட சுற்றுப்பயண பொறுப்பாளர் மலர்கொடி, பணிகளை நேரில் பார்வையிட்டார். அவரது முன்னிலையில் கட்சி நிர்வாகிகளுக்கு, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்களான சீனிவாசன், நாகராஜன், சகுந்தலா, மஞ்சுளா, சிவலதா உடனிருந்தனர். மேற்கு மாவட்டத்தில் மொத்தம், 3 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட தலைவர் நாகராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி