உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாகனம் மோதி கோவில் காளை பலி

வாகனம் மோதி கோவில் காளை பலி

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, புலியூர் - சிப்காட் செல்லும் சாலையில், எலுமிச்சம்பள்ளம் பகுதியில், கோவில் காளை ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கோவில் காளை சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள், உயிரிழந்த காளைக்கு சடங்குகளை செய்தனர். போச்சம்பள்ளி போலீசார், இறந்து கிடந்த கோவில் காளையை மீட்டு, போச்சம்பள்ளி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி