உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறுதானியங்கள் விழிப்புணர்வு

சிறுதானியங்கள் விழிப்புணர்வு

சிறுதானியங்கள் விழிப்புணர்வுகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டம் ஆகியவை இணைந்து, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பேரணியை தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் பி.டி.ஓ., உமாசங்கர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியில், மாணவியர் சிறுதானியங்கள் குறித்த பதாகைகளை ஏந்தி, பெங்களூரு சாலை வழியாக அண்ணாதுரை சிலை வரை சென்று மீண்டும் பள்ளி திரும்பினர்.பேரணியில், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி உள்பட, 300க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை