உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முன்விரோத மோதல் 3 பேருக்கு காப்பு

முன்விரோத மோதல் 3 பேருக்கு காப்பு

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த கரகூர், சப்பானிப்பட்டியை சேர்ந்தவர் ராகுல், 28; வளையல்காரப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார், 21; கடந்த ஓராண்டுக்கு முன், அருண்குமாரின் உறவினர் சுபாஷ் என்பவருடன் காரில் ராகுல் சென்றுள்ளார்.அப்போது கார் விபத்துக்கு உள்ளானதில் சுபாஷ் பலியானார். இதற்கு ராகுல் தான் காரணம் என, அருண்குமார் கூறிவந்த நிலையில் கடந்த, 13ல் கரகூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற ராகுலை, அருண்குமார் தரப்பினர் தாக்கினர். படுகாயமடைந்த ராகுல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் புகார் படி, வளையல்காரப்பட்டியை சேர்ந்த அருண்குமார், 21, சக்திவேல், 21, யுவராஜ், 26, ஆகிய மூவரை, காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி