உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெவ்வேறு இடங்களில் 4 பேர் மாயம்

வெவ்வேறு இடங்களில் 4 பேர் மாயம்

ஓசூர், ஓசூர், மத்திகிரி நேதாஜி நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 48, பெயின்டர்; இவரது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த மார்ச், 23 காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது மனைவி உஷாராணி, 46, புகார் படி, மத்திகிரி போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல், சூளகிரி அடுத்த ஏ.செட்டிப்பள்ளி அருகே எஸ்.திம்மசந்திரத்தை சேர்ந்தவர் பசப்பா, 75, விவசாயி; கடந்த மாதம், 23 காலை, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மகன் சீனப்பா, 38, பேரிகை போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.* சாமல்பட்டி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கனிமொழி, 32; இவர் தன், 12 வயது மகனுடன் கடந்த, 17ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து கனிமொழியின் கணவர் சபரிநாதன் சாமல்பட்டி போலீசில் புகாரளித்தார். அதில் ஓசூரை சேர்ந்த சுகுமார் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை