உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 3 பெண்கள் உட்பட 4 பேர் மாயம்

3 பெண்கள் உட்பட 4 பேர் மாயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த மாரச்சந்திரத்தை சேர்ந்தவர் மதுமிதா, 21; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்-துள்ளார். கடந்த, 8ல் வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மதுமிதாவின் பெற்றோர் நேற்று முன்தினம் குருபரப்பள்ளி போலீசில் புகாரளித்-தனர். அதில், மாரச்சந்திரத்தை சேர்ந்த முகம்மது, 20 என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.* மகாராஜகடை அடுத்த பெத்தமேலுப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 24; நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் அசோக்குமார் புகார் படி மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்-றனர்.* சூளகிரி அருகே காமன்தொட்டியை சேர்ந்தவர் ராகவேந்திரா, 40, தனியார் நிறுவன ஊழியர்; இவரது மனைவி கலாவதி, 35; இவர்களது, 5 வயது மகன், சூளகிரியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி., படிக்கிறார். கடந்த, 3 மாலை, 4:00 மணிக்கு மகனுடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற கலாவதி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் ராகவேந்திரா கொடுத்த புகார் படி, சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை