உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர், தேன்கனிக்கோட்டையில் அரசு ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை

ஓசூர், தேன்கனிக்கோட்டையில் அரசு ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை

ஓசூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.,க்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடப்பதாக, மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஓசூர், தேன்கனிக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.,க்களில், 2024 - 25ம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை வரும், 16 வரை நடக்கிறது. முதற்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்கள், விண்ணப்பிக்க தவறியவர்கள், நேரடி மாணவர் சேர்க்கையில் பங்கேற்கலாம். பயிற்சி காலத்தின் போது, மாணவியருக்கு புதுமை பெண் திட்டத்திலும், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்திலும் மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும். இதுதவிர மாத உதவித்தொகையாக, 750 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், பாடப்புத்தக்கம், வரைபட கருவிகள், லேப்டாப், சீருடை, மிதிவண்டி, பஸ் பாஸ், ஷூ போன்றவை இலவசமாக வழங்கப்படும். மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளது. மாணவியர் அருகில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரி விடுதியில் தங்க பரிந்துரை செய்யப்படும்.ஓராண்டு மற்றும் இரு ஆண்டு பயிற்சியில், 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் சேர முடியும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. 40 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் ஓசூர் அல்லது தேன்கனிக்கோட்டை ஐ.டி.ஐ., நேரடி சேர்க்கையில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குனர் அல்லது முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஓசூர் என்ற முகவரியிலோ, 04344 262457, 80986 63711 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். அதேபோல், தேன்கனிக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை, 94425 25608, 94442 15926 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்