உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அத்வைத் பள்ளி மாணவி நீட் தேர்வில் சாதனை

அத்வைத் பள்ளி மாணவி நீட் தேர்வில் சாதனை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இயங்கி வரும் அத்வைத் இண்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி தீபிகா, நீட் தேர்வில், 720க்கு, 700 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.முதல் முயற்சியிலேயே இவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மாணவி தீபிகாவிற்கு, பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் அஸ்வத் நாராயணா தலைமை வகித்து, மாணவி தீபிகாவிற்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து, இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பள்ளி இயக்குனர் பானு பிரகாஷ், முதல்வர் சங்கீதா ராய், பள்ளி துணை முதல்வர் பவானி, ஆகாஷ் நீட் பயிற்சி மைய தலைமை நிர்வாகி ரவிகாந்த், ஓசூர் கிளை மேலாளர் தவ்சிப் ரசாகான் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி