உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இலவச வீட்டுமனை வழங்குவதில் ஏழைகளை புறக்கணிப்பதாக புகார்

இலவச வீட்டுமனை வழங்குவதில் ஏழைகளை புறக்கணிப்பதாக புகார்

கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி அருகே, இலவச வீட்டுமனை வழங்குவதில் ஏழைகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி, 10க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த சிக்காரிமேட்டில் நரிக்குறவர்கள் இன மக்கள் வசிக்கிறோம். இதில், பெரும்பாலானோர் கூலிவேலை செய்து, வாடகை வீட்டில் வசிக்கிறோம். நாங்கள் பலமுறை இலவச வீட்டுமனை கோரி மனு அளித்தோம். வரும், 25 ல் இலவச வீட்டுமனை வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் கூலி வேலை செய்யும் ஏழைகள் பலர், பட்டாக்கள் பயனாளர் பட்டியலில் இல்லை. மாறாக ஒரே குடும்பத்தை சேர்ந்த, 3 பேர் பட்டா பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பட்டா வழங்கினால் அனைவருக்கும் வழங்க வேண்டும். ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை