உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீடு புகுந்து கொள்ளை முயற்சி

வீடு புகுந்து கொள்ளை முயற்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பையனப்பள்ளியை சேர்ந்தவர் கணேசன், 37, கூலித்தொழிலாளி. கடந்த, 15 அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றுள்ளார். அப்போது கணேசன் எழுந்து, கூச்சலிட்டதால், கொள்ளையடிக்க முயன்றவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து கணேசன் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் அளித்த புகார்படி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !