மேலும் செய்திகள்
புதிய ரேஷன் கடை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
2 hour(s) ago
எருதுவிடும் விழா 10 பேர் மீது வழக்கு
2 hour(s) ago
நண்பரை பார்க்க வந்த டிராவல்ஸ் ஓனர் மாயம்
2 hour(s) ago
ரூ.1.93 லட்சம் குட்கா காரில் கடத்தியவர் கைது
2 hour(s) ago
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம் பஞ்., உட்பட்ட தொழுவபெட்டா, டி.பழையூர், கல்பண்டையூர், குல்லட்டி, கவுனுார், தொட்டதேவனஹள்ளி ஆகிய கிராமங்களில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமங்களுக்கு செல்ல, மேலுாரில் இருந்து வனப்பகுதிக்கு நடுவே செல்லும் வழித்தடங்களில் தான் மக்கள் பயணிக்க வேண்டும். கிட்டத்தட்ட, 9 கி.மீ., துாரத்திற்கு சாலை வசதி இல்லை. பல ஆண்டுகளாக மக்கள் சாலை கேட்டும், வனத்துறை அனுமதி கொடுக்காததால், சாலை அமைக்க முடியவில்லை. இக்கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் உயர் கல்வி கற்க, 10 கி.மீ., தொலைவிலுள்ள உனிசெட்டி அல்லது 24 கி.மீ., தொலைவிலுள்ள தேன்கனிக்கோட்டைக்கு தான் செல்ல வேண்டும். இதனால், உயர் கல்வி கற்கும் மாணவ, மாணவியர் கடுமையாக சிரமப்படுகின்றனர்.தினமும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், யானைகள் நடமாட்டமுள்ள இந்த வழித்தடத்தில் உயிரை பணயம் வைத்து நடந்தோ, இருசக்கர வாகனத்திலோ செல்கின்றனர். பல ஆண்டுகளாக சாலை வசதி கேட்டும் செய்து கொடுக்காததால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், தொழுவபெட்டா, குல்லட்டி கிராம மக்கள் யாரும் ஓட்டளிக்கவில்லை. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக தொழுவபெட்டா, பழையூர் கிராமங்களுக்கு செல்லும் வழிப்பாதையிலுள்ள குழிகளில் மட்டும் மண் கொட்டப்படுகிறது. தற்போது மழை பெய்துள்ளதால், கொட்டப்பட்டுள்ள மண் சேறும், சகதியுமாகி, மக்கள் நடந்தோ, வாகனத்திலோ செல்ல முடியாத நிலை உள்ளது. முறையான சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே மலை கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago