ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றம்
ஓசூர், ஆக. 25-தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கோவிந்தப்பள்ளி கிராமத்தில், அங்கன்வாடி மையம் கட்ட அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலத்தில் நாராயணன் என்பவர் வீடு கட்டியிருந்தார்.இதையடுத்து, தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர் உத்தரவின்படி, அந்த வீடு நேற்று பொக்லைன் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டு, அங்கன்வாடி மையம் கட்ட நிலம் மீட்கப்பட்டது. கெலமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.