உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிங்காரப்பேட்டையில் விநாயகர் சிலை கரைப்பு

சிங்காரப்பேட்டையில் விநாயகர் சிலை கரைப்பு

சிங்காரப்பேட்டையில் விநாயகர் சிலை கரைப்புஊத்தங்கரை, செப். 8-ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை வைக்கப்பட்டு, நேற்று காலை முதல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து அன்னதானம் நடந்தது. மாலை, 5:30 மணி அளவில் குருகப்பட்டி திருப்பத்துார் மெயின் ரோடு பஸ் ஸ்டாப் வழியாக சுவாமியை ஊர்வலமாக கொண்டு சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் சென்று, தீர்த்தகிரி வலசை பெரிய ஏரியில் விநாயகர் சிலையை கரைத்தனர். இதில், இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி, ஒன்றிய தலைவர் ஏழுமலை, நிர்வாகிகள், சுரேஷ்குமார், சத்தியமூர்த்தி, சரவணன், சங்கர், நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை