உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.9.59 லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.9.59 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர், மணி, 30; பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். மே 16ல் இவரது மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், 'நாங்கள் அனுப்பியுள்ள செயலியை பதிவிறக்கம் செய்து, ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும்' என இருந்தது. அதன்படி, அந்த செயலி மூலம் சிறிதளவு பணம் முதலீடு செய்தார். அதற்கு கணிசமானலாபத்தொகை கிடைத்தது. அதை நம்பி, தன்னிடமிருந்த, 9.59 லட்சம் ரூபாயை அவர்கள்அனுப்பிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார்.அதன்பின் எந்த தொகையும் வராமல், அச்செயலி முடங்கியது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை