உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறுவனிடம் மொபைல் பறிப்பு நான்கு பேர் கும்பல் கைது

சிறுவனிடம் மொபைல் பறிப்பு நான்கு பேர் கும்பல் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுார் கோட்டை பகு-தியை சேர்ந்தவர், 18 வயது சிறுவன்; சிக்கன் கடையில் வேலை செய்கிறார்; நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, கோட்டை பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த, நான்கு பேர் கொண்ட கும்பல், சிறுவனை கத்தி முனையில் மிரட்டி, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை பறித்து சென்றது. பாகலுார் போலீசார் வழக்குப்பதிந்து, பாகலுார் கோட்டையை சேர்ந்த நிகித், 20, 18 வயது சிறுவன், பாகலுார் காலனியை சேர்ந்த, 18 வயது சிறுவன், பாகலுாரை சேர்ந்த விஜயகுமார், 19, ஆகிய நான்கு பேரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ