உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 10 ஒன்றியங்களில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

10 ஒன்றியங்களில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி:பள்ளியில், 10ம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவியர், படிப்பை தொடராமல், பலர் வேலைக்கு சென்று விடுகின்றனர். அதே போல், பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவியர் என்ன மேல்படிப்பை படிக்க வேண்டும் என தெரியாமல் உள்ளனர். இவர்களுக்கு வழிகாட்டும் விதமாக, தமிழக அரசு அனைத்து ஒன்றியங்களிலும், உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்த உத்தரவிட்டுள்ளது.அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சி.இ.ஓ.,வின் வழிகாட்டுதலின் படி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் வட்டார வள மையம் சார்பில், நேற்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தியது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) அசோக் தலைமை வகித்தார். உயர் கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் மேரி மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்கள், 9 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர், துணைத்தலைவர், முன்னாள் பள்ளி மாணவர்கள் மற்றும் என்.எஸ்.எஸ்., தன்னார்வலர்களுக்கு, 10ம் வகுப்பு முடித்த பின் கட்டாயம் படிப்பை தொடர வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்கள் வேலை வாய்ப்பை பெறும் வகையில் என்ன மேல்படிப்பை படிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தனர். இதில், 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்டத்திலுள்ள, 10 ஒன்றியங்களிலும், கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை