உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: ஹிந்து கோவில்களை விட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கலைகோபி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் ஹிந்து கோவில்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்தும், ஹிந்து சமய அறநிலையத்துறை, கோவில்களை விட்டு வெளியேற வேண்டும். கோவில்களை சீரழிக்க வேண்டாம். ஹிந்து கோவில்கள், ஹிந்துக்களுக்கே என்பதை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லையெனக்கூறி, போலீசார், 13 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஓசூர் ராம்நகரிலும், தாலுகா அலுவலக சாலையிலுள்ள கிருஷ்ணன் கோவில் முன்பும், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, இந்து முன்னணி சேலம் கோட்ட பொறுப்பாளர் உமேஷ் உட்பட, 27 பேரை போலீசார் கைது செய்து, மண்டபத்தில் அடைத்தனர். பின் மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை