உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவிலை இடிப்பதாக அவதுாறு: ஹிந்து முன்னணி தலைவர் கைது

கோவிலை இடிப்பதாக அவதுாறு: ஹிந்து முன்னணி தலைவர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் கலைகோபி, 47. இவர், கடந்த, 1ல் சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஒரு பதிவில், 'கிருஷ்ணகிரி ஐந்து ரோடு, சேலம் சாலையில் உள்ள, 800 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணன் சாமி தெருவில் இருக்கும் ஸ்ரீநவநீத வேணுகோபால சுவாமி கோவிலை, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் இடிக்க திட்டம் தீட்டி வருகின்றனர்.'தடுக்காவிட்டால் நம் சுவாமியை திருடி விடுவர். வாருங்கள் சொந்தங்களே, நம் முன்னோர் கட்டிய ஆலயத்தை காப்பாற்றுவோம்' என, பதிவிட்டு இருந்தார்.இதுகுறித்த புகாரின்படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து, கோவில் முன் பாதுகாப்பை பலப்படுத்தினர். விசாரணையில், வேறு கோவில் கட்டடத்தின் படத்தை போட்டு, கலைகோபி அவதுாறு பரப்பியது தெரிந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.கோவில் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என, கிருஷ்ணகிரி அறநிலையத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை