மேலும் செய்திகள்
பால்வினை நோய் தொற்று விழிப்புணர்வு பிரசாரம்
24-Aug-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்-வினை நோய் பற்றிய பிரசாரம் கடந்த ஆக., 12ல் முதல் வரும் அக்., 12 வரை நடக்கிறது. நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் எச்.ஐ.வி., குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. கல்லுாரி மாணவ, மாணவியரின் மனித சங்கிலி மற்றும் விழிப்பு-ணர்வு பேரணியையும் டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஆட்டோவில் எச்.ஐ.வி., குறித்த விழிப்பு-ணர்வு ஸ்டிக்கர்களையும் ஒட்டினார். மக்கள் கலைக்குழுவினர் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட திட்ட மேலாளர் அருள், அரசு மருத்துக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் மது, கூட்டு மருந்து சிகிச்சை மருத்துவர் ஜெகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
24-Aug-2024