உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தான் படித்த பள்ளிக்கே ஹெச்.எம்., பெற்றோர், பொதுமக்கள் பாராட்டு

தான் படித்த பள்ளிக்கே ஹெச்.எம்., பெற்றோர், பொதுமக்கள் பாராட்டு

கிருஷ்ணகிரி:காவேரிப்பட்டணம் ஒன்றியம், வேலம்பட்டியை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை கடந்த, 1985 முதல், 90 வரை படித்தார். பின்னர் மேல் படிப்பை முடித்த பாலசுந்தரம், திருப்பத்துார் மாவட்டம், நடுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். தற்போது, 10ம் வகுப்பு வரை, தான் படித்த வேலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று அவர், தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தலைமை ஆசிரியர் பாலசுந்தரம் கூறுகையில், ''தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பணியேற்றது மிகவும் பெருமையாக உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி