வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
வீடு புகுந்து நகை, பணம் திருட்டுசூளகிரி:சூளகிரி அருகே காமன்தொட்டியை சேர்ந்தவர் ஸ்ரீராம், 32. தனியார் கிரானைட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி சாந்தா, 30, கார்மென்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.மதிய நேரத்தில் வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10 பவுன் நகை மற்றும் 500 கிராம் வெள்ளி, 12,000 ரொக்கம் திருட்டு போயிருந்தது. ஸ்ரீராம் கொடுத்த புகார்படி, சூளகிரி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.