| ADDED : மே 10, 2024 02:40 AM
கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய் துறையினரிடம், பொதுமக்கள் அளித்த பல்வேறு மனுக்களை, அதிகாரிகள் விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மூத்த குடிமக்கள் மேல்முறையீடு, பிறப்பு இறப்பு பதிவு, பொது கட்டடம் உரிமை வழங்குதல், மோட்டார் வாகன விபத்து நிவாரணம், யு.டி.ஆர்., மேல் முறையீடு, பட்டா இடமாற்றம் மேல் முறையீடு, சமூக சான்றிதழ் உண்மை தன்மை, நிலுவை மனுக்களை உடனுக்குடன் விசாரித்து முடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் புஷ்பா, ஓசூர் உதவி கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, மற்றும் தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.