மேலும் செய்திகள்
விவசாயி மர்மச்சாவு
05-Oct-2025
தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
05-Oct-2025
மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்
05-Oct-2025
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில், 30 நாட்கள் இலவச கோடைக்கால கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில், ஸ்போர்ட்ஸ் ஷோட்டோகான் கராத்தே டூ பெடரேஷன், தென்னிந்தியா கராத்தே டூ அசோசியேஷன் மற்றும் சூரியா ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து, இளைய தலைமுறையினருக்கு இடையே தற்காப்பு கலையை ஊக்குவிக்கும் வகையில், இலவச கோடைக்கால கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி முகாம் நடந்தது. இதில், காவேரிப்பட்டணம், திம்மாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, 3 முதல், 15 வயது வரையிலான மாணவ, மாணவியர், 150 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு, பயிற்சியாளர் மாரியப்பன், துணை பயிற்சியாளர்கள் சூர்யா, தங்கம், தம்பிதுரை ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், கராத்தே மற்றும் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பயிற்சிகளை அளித்தனர். ஒரு மாதம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, சான்றிதழ்கள் மற்றும் பெல்ட் வழங்கும் விழா நடந்தது. இதில், கிராண்ட் மாஸ்டர் ஹன்சி நடராஜ், தற்காப்பு கலையை கற்றுக் கொண்ட மாணவ, மாணவியருக்கு, மஞ்சள், ஆரஞ்ச், பச்சை, நீலம் உள்ளிட்ட பல்வேறு வகையான பெல்ட் வகைகள் மட்டுமின்றி, சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025