கே.ஆர்.பி., அணைக்கு வரும் பச்சை நிற நீரால் துர்நாற்றம்
கிருஷ்ணகிரி: ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து சராசரியாக தினமும், 250 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், நேற்று காலை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, 369 கன அடி நீர்வரத்து வந்தது. அணையின், 2 சிறிய மதகின் மூலம் தென்-பெண்ணை ஆற்றில், 433 கன அடி, பாசனத்திற்கு இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில், 185 கன அடி என மொத்தம், 618 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 50.25 அடியாக நீர்மட்டம் இருந்தது. தற்போது அணைக்கு பச்சை நிறத்தில் வந்து கொண்டிருக்கும் தண்ணீரால் துர்நாற்றமும் வீசி வருகிறது.பாரூர் பெரிய ஏரி, முழு கொள்ளளவான, 15.60 அடியை எட்டி-யுள்ளதால், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும், 126 கன அடிநீர் அப்ப-டியே வெளியேற்றப்பட்டுள்ளது. பாம்பாறு அணையின் நீர்-மட்டம், 19.60 அடியில், தற்போது, 14.07 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்தும் இல்லை. நீர் வெளியேற்-றமும் இல்லை. சின்னாறு அணைக்கு நீர்வரத்து இன்றி நீர்மட்டம் பூஜ்ஜியமாக உள்ளது.