போக்சோவில் சிறை சென்றவர் மாணவியுடன் தற்கொலை
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கவுதாளத்தைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி, 22, கிருஷ்ணகிரி அரசு கலை கல்லுாரி விடுதியில் தங்கி பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கும், பச்சப்பனட்டியைச் சேர்ந்த, 17 வயது மாணவி ஓராண்டாக காதலித்தனர்.ஜூன், 22ல் மாணவி மாயமான நிலையில், நரசிம்மமூர்த்தி மீது பெண்ணின் தாய் புகார் அளித்தார். தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார், அவரை போக்சோவில் கைது செய்தனர்.கடந்த, 12ல் ஜாமினில் வந்த நரசிம்மமூர்த்தி, மாணவியுடன் காதலை தொடர்ந்தார். விடுதியில் இருந்து நேற்று முன்தினம் ஊருக்கு வருவதாக தன் பெற்றோரிடம் கூறிய மாணவி வரவில்லை.இதற்கிடையே, நேற்று காலை, நரசிம்மமூர்த்தி, மாணவியுடன் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.