உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆடுகள் திருடியவருக்கு காப்பு

ஆடுகள் திருடியவருக்கு காப்பு

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த குருவிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் சென்னையன், 23, எலக்ட்ரீஷியன். இவரது வீட்டருகே இருந்த ஆட்டுக்கொட்டகையிலிருந்து கடந்த, 27 இரவு, 4 ஆடுகள் திருடு போனது. மறுநாள் குந்தாரப்பள்ளி சந்தையில், சென்னையன் வீட்டில் திருடு போன ஆடுகளை சிலர் விற்க முயன்றது தெரிந்தது. இது குறித்து சென்னையன் கந்திக்குப்பம் போலீசில் அளித்த புகார் படி, ஆடுகள் திருடிய பெத்ததாளப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்த, 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவரிடமிருந்து, 3 ஆடுகள் மீட்கப்பட்டன. மேலும் பழையபேட்டையை சேர்ந்த பரூக், 23, சாதுல்லா, 18, சோமார்பேட்டை சிக்கந்தர், 25 ஆகியோரையும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை