கிருஷ்ணகிரி;மா விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு, 75,000 ரூபாய் நஷ்டஈடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், தமிழ் மாநில விவசாய சங்க மாவட்ட குழு கூட்டம், மாவட்ட தலைவர் கண்ணு தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தேசிய செயலாளர் அருள்குமார் அஞ்சானுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் சேகர் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவநாதன், பூபதி, ரஷ்யா பேகம், முனியன், வெங்கடேசன், கமலேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், இந்த ஆண்டில் சங்கத்தில், 10,000 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். கிராமப்புற ஏழை விவசாய கூலித்தொழிலாளர்கள், 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். பர்கூர் தாலுகா ஒப்பதவாடி பஞ்.,ல் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மா விவசாய தொழிலாளர்களுக்கு, அரசு உடனே நஷ்டஈடு வழங்க வேண்டும். மா விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு, 75,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். காய்ந்த மா மரம் ஒன்றுக்கு, 5,000 ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.